Breaking News

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக இறக்கப்பட்ட சிறைக்கைதிகள்



கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக  சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை தாக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்த குழுக்கள் பல்வேறு சிறைகளில் இருந்து சிறைக் கைதிகளையும் அழைத்து வந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் பல கைதிகள் சிறைபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

No comments