சற்றுமுன் மகிந்த ராஜபக்ச உள்ளடங்கலாக முக்கியஸ்தர்கள் மீது நீதி மன்றில் மனுத்தாக்கல்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை அருகே மைனா கோ கம என ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி தடைகளை ஏற்படுத்தியுள்ளமை உட்படலான பல இடையூறுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு எதிரான இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments