புதிய ஆட்சியில் கூட்டமைப்பு முக்கியஸ்தருக்கு அமைச்சுப் பதவி
அச்செய்தியில்,
புதிய அமைச்சரவை பரிந்துரைப் பட்டியலில் நீதி அமைச்சராக ஒருவரும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக ஒருவரும் என்று இரண்டு தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அபிவிருத்தி அமைச்சர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கிழக்கைச் சேர்ந்த அந்த முக்கியஸ்தர் பதவியைப் பொறுப்பேற்கப் பின்னடித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதி அமைச்சுப் பொறுப்பு ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இத்தனையும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு தெரியாமல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை தொடர்பு கொண்ட கேட்ட போது அமைச்சு பதவிகள் ஏற்பது தொடர்பான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார்.(Vavuniyan)
No comments