Breaking News

எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நடைமுறை


எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறையை பின்பற்ற தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தொடருந்து ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் 40 சதவீத எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் விநியோகத்துக்கான போக்குவரத்து செலவை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் எரிபொருள் விநியோகத்திற்கு சமுகமளிக்காத சகல விநியோகத்தர்களின் அனுமதிபத்திரங்களையும் இரத்து செய்வதோடு சேவைக்கு சமுகமளிப்பவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments