’கடனை செலுத்த முடியாத நிலையில் நிற்கின்றோம்
பாராளுமன்றத்தில் நேற்று (18) நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நாங்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 30 நாட்களுக்காக சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அதுவும் முடிவடைந்துள்ளது. குறிப்பாக ஒரு கொடுப்பனவை மீளச் செலுத்தாவிட்டால் மற்றைய அனைத்தும் நெருக்கடிக்குள் செல்லும். இதன்படி இன்றைய நிலைமையில் அடுத்த மாதமளவில் 5.5 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நாங்கள் சட்டத்தரணிகளையோ, நிதி ஆலோசகர்களையோ நியமிக்கவில்லை. அலிசப்ரி, அப்போது இதனை செய்யலாம் என்று நினைத்தே குறித்த 30 நாட்கள் சலுகைக் காலத்தை கோரியிருக்கலாம். இப்போது பிரதமரின் வேலைத்திட்டம் என்ன என்று கேட்கின்றோம் என்றார். (Vavuniyan)
No comments