Breaking News

எரிபொருள் வழங்குவதில் இன்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்


எரிபொருள் வழங்குவதில் இன்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இதன்படி, உந்துருளிகளுக்கு 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சிற்றுந்து, மகிழுந்து மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 8,000 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எனினும், இந்த எரிபொருள் விநியோக கட்டுப்பாடு பேருந்து, பாரவூர்தி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments