நாளை பதவி விலகத் தயாராகும் மகிந்த! அறிவித்தார் பசில்
அரசாங்கத்திற்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின்னர், நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பின்னர், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன அணியில் இருந்து விலகி, சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பசில் ராஜபக்ச, பிரதமரின் இம் முடிவு தொடர்பாக அறிவித்துள்ளார்.
இதன்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சாராத ஒருவரை பிரதமராக தெரிவு செய்யவும் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments