லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
தமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக மட்டுமே எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு முரணான வகையில் எரிவாயுவை சேமித்தல் மற்றும் கொள்கலன் சேமிப்பு பேணப்படுமாயின் அது லிட்ரோ நிறுவனத்தின் அனுமதியல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தனிப்பட்ட சேமிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பல அரசியல்வாதிகளின் வீடுகளில் பெருமளவிலான லிட்ரோ எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. (Vavuniyan)
No comments