Breaking News

வவுனியாவில் எரிவாயு கோரி பொதுமக்கள் வீதி மறியல்!’


வவுனியாவில் எரிவாயு கோரி பொதுமக்கள் வீதியினை வழிமறித்தமையால் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டது.

இன்றையதினம் வீட்டுப்பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என லிற்றோ நிறுவனம் அறிவித்ததையடுத்து வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

எனினும் பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கப்படாத்தையடுத்து எரிவாயுசிலிண்டர்களினால் வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். (Vavuniyan)








No comments