Breaking News

குமார வெல்கம மீது தாக்குதல்-இரு சந்தேகநபர்கள் கைது



கடந்த 9ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து கடந்த 9
ம் திகதி தாக்கப்பட்டார்.மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments