தூரப் பயணத்தை இன்று மாத்திரமே முன்னெடுக்க முடியும்
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்று அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு தூரபிரதேச போக்குவரத்தினை இன்று மாத்திரமே முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்
தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan)
No comments