Breaking News

டீசல் அடங்கிய கப்பல் நாளை இலங்கை வருகிறது


நாளை டீசல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறியப்படுத்தியுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பலை நாளைய தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாட்டை வந்தடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்தார்.

தற்போது வைத்தியசாலைகள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் டீசல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மாத்திரம் விநியோகிக்கப்படுகிறது. (Vavuniyan) 

No comments