மோட்டார்சைக்கிளுடன், பாரவூர்த்தி மோதி விபத்து - பாடசாலை அதிபர் பலி
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார்சைக்கிளுடன், பாரவூர்த்தி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan)
No comments