வவுனியா கணேசபுரத்தில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!!.
வவுனியா கணேசபுரத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப்பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments