Breaking News

மகிந்தவின் பதவி விலகல் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்: சூடு பிடிக்கும் அரசியல் களம்


பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியாகியிருந்த போதிலும், பிரதமர் பதவி விலக மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மற்றும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் ஆகியோர், பிரதமர் பதவி விலகப் போவதில்லை என்றும், அதற்கு நேர்மாறான தகவல்கள் அல்லது அறிக்கைகள் "தவறானவை" என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ரொஹான் வெலிவிட்ட, பாராளுமன்றத்தில் திட்டமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை பதவி விலகுவது பற்றியது அல்ல என்று கூறினார்.

எக்காரணம் கொண்டும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார். என்றும் தெரிவித்தார். (Vavuniyan) 

No comments