Breaking News

தற்போதைய சூழ்நிலை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா?


தற்போதைய சூழ்நிலை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை பொதுமக்கள் நேற்று அடித்து நொருக்கி ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அவரது எச்சரிக்கை வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்திய நமது குடிமக்கள் அனைவருக்கும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.(Vavuniyan) 

No comments