Breaking News

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு


பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் அட்டுலுகம பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றுக்கு அருகில் இருந்து சற்று முன்னர் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10.15 மணியளவில் தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார்.(Vavuniyan) 

No comments