Breaking News

“கோட்டா கோ கம” வுக்கு பொலிஸார் ஆப்பு


ஊரடங்கு காலத்திலும் காலிமுகத்திடல் பகுதியில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளவர்களுக்கு பொலிஸாரால் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எவரும் பொது இடங்களில் ஒன்று கூட முடியாது என அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் எந்தவோர் இடத்திலும் அது கடற்கரையாக இருக்கலாம் உரிய அனுமதியின்றி ஒன்று கூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பு பொலிஸாரால் விடுக்கப்பட்டு வருகின்றது. (Vavuniyan) 

No comments