08/06/2022 இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம் - குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறைந்து போகும். ஏட்டிக்குப் போட்டியாக பேசுவார்கள். வியாபாரம் மந்தமாக நடக்கும். போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது. பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும்.
மிதுனம் - வங்கிச் சேமிப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றகரமாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமானத்துறை, கமிஷன் வியாபாரம் போன்றவற்றில் அதிக லாபம் பார்ப்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.
கடகம் - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள். அந்நிய நாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதர உறவுகள் உங்களை நிம்மதியாகத் தூங்க விடாது. ஏதாவது பிரச்சனையைக் கிளப்புவார்கள். தொழிலில் எதிர்ப்புகளைத் தாண்டி ஏற்றம் பெறுவீர்கள். புதிய பொறுப்புக்கள் வரும்.
சிம்மம் - வியாபாரத்தில் வருமானம் உயரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பாராத பணவரவு இருக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அனுகூலமாக நடக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் வாக்குக்கு நல்ல மரியாதை கிடைக்கும். பெண்கள் உங்கள் மனதைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்ப்பார்கள். எதிர்ப்புகள் விலகும்.
கன்னி - அதிகமாக ஆசைப்படாதீர்கள். குழம்பிய மனதில் நிம்மதி இருக்காது. அடுத்தவர் பேச்சைக் கேட்டு கைப்பொருளை இழந்துவிடாதீர்கள். ஃபைனான்ஸ் கம்பெனிகளில் பணம் செலுத்தாதீர்கள். ஒப்பந்தங்களில். படித்துப் பார்த்து கையெழுத்து போடுங்கள். உடன் இருப்பவர்களே வியாபாரத்தைக் கொடுக்க நினைப்பார்கள். கோபத்தால் வேலையை விட்டு விடாதீர்கள்.
துலாம் - கடல் கடந்து செல்வீர்கள். லாபத்தோடு இந்தப் பிரிவு அமையும். தக்க நேரத்தில் ஒருவருக்கு உதவி செய்தீர்கள். ஆனால் திரும்ப கிடைக்க தாமதமாகும். நேரம் பாதகமாக இருந்தால் ஓட்டும் வண்டிகூட உங்களுக்கு எதிரியாக மாறும். கவனமாக வாகனத்தைச் செலுத்துங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. கெட்ட கனவுகள் வரும்.
விருச்சிகம் - எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். அதற்காக பணத்தை சேர்க்கச் திட்டமிடுவீர்கள். வாங்கிப்போட்ட நிலத்தை விற்று தொழிலில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் சம்பள உயர்வு கிடைக்கும். உழைப்பைப் பாராட்டி முதலாளிகள் பரிசு வழங்கு வார்கள். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையை ஆரம்பிப்பீர்கள். .
தனுசு - ஒதுங்கிப் போனவர்கள் தேடி வந்து உறவாடுவார்கள். சஞ்சலப் பட்ட மனம் பெரியோர்களின் சந்திப்பால் தெளிவடையும். கடந்தகால சில கசப்பான சம்பவங்கள் அனுபவத்தை கற்றுத் தரும். தொழிலுக்குத் தேவை இல்லாத அம்சங்களை விலக்கி விடுங்கள். சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து அதற்கான நாள் குறிப்பீர்கள்.
மகரம் - குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பீர்கள். உடைந்து போன உறவுகளை ஒட்டவைப்பீர்கள். கூட்டாக தொழில் செய்ய ஒப்பந்தம் போடுவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான லைசென்சை பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். வில்லங்கமான நிலம் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.
கும்பம் - வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். பைனான்ஸ் கம்பெனியில் எச்சரிக்கை தேவை. வேலைக்காக வெளிமாநிலம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். விருப்பம் இல்லாத வேலைக்காக இடம் மாறிச் செல்வீர்கள். சிறிய வேலைக்கு அதிகச் செலவு உண்டாகும். சந்திராஷ்டமம் நாள். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மீனம் - குடும்பத்தில் இருந்த இறுக்க நிலை மாறி கலகலப்பு காணப்படும். பிள்ளைகளைப் பற்றிய பெரிய கவலை நீங்கும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், கமிஷன் வியாபாரம் போன்றவை கைகொடுக்கும்.முடிக்க முடியாத பணியைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பாராத பண உதவி தக்க நேரத்தில் கிடைக்கும்.
No comments