Breaking News

3000 பேக்கரிகள் மூடப்படும் அபாயம்


பேக்கரி உணவுகளை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ள காரணத்தினால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், 50 கிலோகிராம் கோதுமை மா பொதியின் விலை 1000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும்  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலையும் உயர்வடையும் எனவும், பொதுமக்களையே இது வெகுவாக பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுமார் 3000 பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan) 

No comments