எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 70% ஐ மூட முடிவு
30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் சங்கம், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுதொகை எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளதால், 20 சதவீதமானோருக்காவது எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால், இராணுவ பாதுகாப்பை வழங்குமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால், 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு போடப்படுவது அவசியம் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. (Vavuniyan)
No comments