Breaking News

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 75,000 லீற்றருக்கும் அதிக அளவான எரிபொருள் மீட்பு


எரிபொருளை மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது இதுவரை 23,728 லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 41,382 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, 11,876 லீற்றர் மண்ணெண்ணெய்யையும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. (Vavuniyan) 

No comments