யார் யார் முகக் கவசம் அணிய வேண்டும்? – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
உள்ளக அரங்குகள் மற்றும் வெளி அரங்குகளில் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன, அறிக்கையொன்றின் ஊடாக இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சுவாச கோளாறு காணப்படுகின்ற நபர்கள், முகக் கவசத்தை தொடர்ந்தும் அணிவது சிறந்தது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது விருப்பத்திற்கு அமைய, எந்தவொரு நபரும் முகக் கவசத்தை அணிய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கு இன்று முதல் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. (Vavuniyan)
No comments