Breaking News

வவுனியாவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வாகன வரிசை


வவுனியாவில் பேருந்துகள் மற்றும் பார ஊர்திகள், மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருளை  பெற்றுக்கொள்ள இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசை மக்கள் காத்திருந்தனர்.

வவுனியா மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இவ்வாறு வாகன வரிசை காணப்பட்டது.

இவ்வாறு நூற்றுக்கணக்கான  வாகனங்கள் வரிசையில் நின்ற போதிலும் பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட்டது.

இதேவேளை பேருந்து மற்றும் பார ஊர்திகளுக்கு எரிபொருள் கிடைக்காமையினால்  தங்கள் சேவையில் ஈடுபடமுடியாது உள்ளதாக பேருந்து சாரதிகள் கவலைதெரிவிக்கின்றனர்.

மேலும் பெற்றோலை பெற்றுக்கொள்ள  முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments