கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம்
கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்த புதிய திரிபு BA5 என அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 63 நாடுகளில் இந்த கொவிட் திரிவு கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கையில் இதுவரை இந்த திரிபுடைய கொவிட் தொற்று ஏற்பட்டதாக பதிவாகவில்லை என அவர் தெரிவித்தார். (Vavuniyan)
No comments