கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி - துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்
மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்தவராவார்
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். (Vavuniyan)
No comments