வவுனியாவில் எரிபொருள் நிலையங்களில் பாகுபாடு - அரசாங்க அதிபர் அசமந்தம்
வவுனியாவில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டுவரும் நிலையில் இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர் அசமந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியாவில் எரிபொருள் வழங்கும் செயற்பாட்டில் அரச நிர்வாகம் செயற்பட்டு சில வழிமுறைகளை கைக்கொண்டிருந்தது.
இதன் பிரகாரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்போருக்கு பொலிஸ் அதிகாரி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகமையாளரின் கையொப்பத்துடன் சிட்டை வழங்கப்பட்டு பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் செயலி ஒன்றின் உதவியுடன் எரிபொருள் வழங்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிட்டை எடுப்பதற்கு இரண்னுநாட்கள் வரிசையில் காத்திருந்து பின்னர் எரிபொருள் பெறவும் ஒரு நாள் கத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் குறித்த செயற்பாட்டை வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் செயற்படுத்த முடியாமல் போயிருந்தது.
இவ்வாறான ஒரு முறைமையை ஏற்படுத்தியிருந்தது அரசாங்க அதிபர் அதனை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நடைமுறைப்படுத்தாமல் அசமந்தமாகவே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நடைமுறைப்படுத்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அரசியல் செல்வதாக்குள்ளவர்களாக காணப்படுவதாகவும் தெரிவித்தவர்கள் சில உயர் அதிகாரிகள் தமது தேவையின் பொருட்டு பரல்கள் மற்றும் வாகனங்களில் போதுமான அளவு எரிபொருளை பெறுவதையும் அரசாங்க அதிபர் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.
No comments