பதுக்கிவைக்கப்பட்டிருந்த மூவாயிரம் லீற்றர் டீசல் மீட்பு!!
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3000 ஆயிரம் லீற்றர் அளவிலான 15பெரல் டீசல் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டது.
வவுனியா பொலிஸ் விசேடபிரிவினரால் குறித்த பகுதியினர், நெளுக்குளம் பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் இணைந்து வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில் மாலை திடீர்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது 15 பெரல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசலினை மீட்ட பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
No comments