Breaking News

சிபெட்கோவின் புதிய தலைவர் பொறுப்பேற்றார்


முன்னாள் நீதி அமைச்சரும் நிதி அமைச்சருமான மொஹமட் அலி சப்ரியின் சகோதரரான மொஹமட் உவைஸ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) புதிய தலைவராக தனது கடமைகளை இன்று (07) பொறுப்பேற்றார்.

அவர், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவராக 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை பணியாற்றியிருந்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகக் கடமையாற்றிய சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்திருந்த நிலையில், அப்பதவி வெற்றிடத்துக்கே உவைஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments