வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா
வவுனியா, புதூர் நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜுன் மாதம் 27ஆம் திகதி சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்றையதினம் காலையிலிருந்து விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், இரவு பொங்கலும் நடைபெறவுள்ளது.
இதேவேளை குறித்த விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கான சகல ஒழுங்குகளினையும் ஆலய நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை பொங்கல் விழாவானது, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments