Breaking News

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கலவரம் நால்வர்காயம்!! இருவர் கைது

ஆண்டியாபுளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்

17/06/2022 அன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன.

இந்நிலையில் இரு தரப்புகளிற்கிடையில் ஏற்ப்பட்ட முரன்பாடு கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிவடைந்தது.

குறித்த சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்ததுடன்,பேருந்து ஒன்றுதாக்கப்பட்டதுடன்,கப் ரக வாகனம் ஒன்றின் இருக்கை தீயிட்டு எரிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் இருவரை கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments