நீர்பாசன கால்வாயில் விழுந்து குழந்தை பலி
கிளிநொச்சி மருதநகர் நீர் பாசன கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று பலியாகியுள்ளதாக.
குறித்த சம்பவம் நேற்று (04) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிசாந்தன் சபீசன் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.
இதேவேளை குழந்தையின் உடல் அயலவர்களினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் உடல் கூற்று விசாரணைக்கு வைக்கப்படுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொண்டு வருகிறது. (Vavuniyan)
No comments