வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் சந்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை காணாமல் போனாரின் அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உளவினர்களுக்கு அனுப்பப்ட்டுள்ள கடிதத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்திருந்த போராட்டக்காரர்கள் ஐ நாவிற்கு கண்துடைப்புக்காக இவ்வாறு கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். (Vavuniyan)
No comments