Breaking News

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ விபத்து


வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் வவவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே  ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியாலய போராட்டத்தினை அடுத்து தீயினை முற்றாக அனைத்திருந்தனர்.

இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.







No comments