Breaking News

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக கைது


“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்லும் சகல வாசல்களையும் மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்லவிடாமலும் தடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு கடமையில் இருக்கும் பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து பொலிஸ் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments