Breaking News

இலங்கைக்கு வருடாந்தம் ஏற்படும் பாரிய இழப்பு - வெளிப்படுத்திய பேராசிரியர்


சலுகை வாகன அனுமதிப்பத்திரம்

சலுகை வாகன அனுமதிப்பத்திரம் காரணமாக இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 94 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இதனை தெரிவித்துள்ளார்.

அரசுக்கு ஏற்படும் இழப்பு

இந்த தொகையானது வாகன இறக்குமதி வரி மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்திற்கு சமமானது எனவும் இந்த நிலையில் அரசாங்கத்தின் வாகன வரி கொள்கை நகைப்புக்குரியதாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வருடத்திற்கு 10,000 வரை சலுகை வாகன உரிமங்களை வழங்குகிறது, அவற்றில் பல சொகுசு அல்லது அதிக திறன் கொண்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 94 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அவர் கூறினார். (Vavuniyan) 

No comments