வவுனியா பல்கலைக்கழகத்தில் 3.5 மில்லியன் நிதியில் பற்சிகிச்சை சுகாதார பிரிவு ஆரம்பித்து வைப்பு
வவுனியா பல்கலைக்கழகத்தில் பற்சிகிச்சை சுகாதார பிரிவு இன்றைய தினம் (18) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் 2000 மாணவர்களும், 500 மேற்பட்ட ஊழியர்களும் இருக்கின்ற போதும் அங்கு பற் சுகாதாரம் தொடர்பான வசதி இல்லாத நிலைமை காணப்பட்டிருந்தது. இதனை கருத்திற்கொண்டு அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தின் நிதி உதவியுடன் 3.5 மில்லின் ரூபா செலவில் பற்சிகிச்சை சுகாதார பிரிவு இன்றைய தினம் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் மனமோகன் மற்றும் வைத்தியர் திருமதி கௌரி மனமோகனால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருருந்தினராக அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தாவும், அதன் தலைவருமான வைத்தியர் மனமோகன், வைத்தியர் திருமதி கௌரி மனமோகன், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மங்களேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி வைத்தியர் சத்தியலிங்கம், கண் சிகிச்சை வைத்திய நிபுனர் மலரவன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன், பற்சிகிச்சை நிபுணர் உதயகுமார், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
No comments