5000 ரூபாவுக்கு பெற்றோல் வேண்டும் இல்லையேல் மின்சாரம் வராது அச்சுறுத்திய ஊழியர்கள்.
5000 ரூபாவுக்கு பெற்றோல் வழங்காவிட்டால் தடைப்பட்ட மின்சாரம் வராது என மின்சாரசபை ஊழியர்கள் அச்சுறுத்தியதாக எரிபொருளை பெற வந்தவர்கள் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
வவுனியா ஓமந்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பெற்றோல் வழங்கப்பட்டது.
இந் நிலையில் புளியங்குளம் பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த மின்சாரசபை ஊழியர்கள் அங்கு எரிபொருள் வழங்கப்படாமையால் ஓமந்தை எரிபொருள் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது 2500 ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமக்கு 5000 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என மின்சாரசபை ஊழியர்கள் தெரிவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த நேரத்தில் தடைப்பட்டிருந்த மின்சாரத்தினையும் வழங்க முடியாது எனவும் மின்சாரசபை ஊழியர்கள் தெரிவித்ததாகவும் அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் மின்சாரம் வந்ததையடுத்து மின்சாரசபை ஊழியர்களுக்கு 2500 ரூபாவுக்கே பெற்றோல் வழங்கப்பட்டிருந்தது.
No comments