வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட 9 பேர் கைது!’
வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்ப்பட்ட 9 பேர் வவுனியா பொலிசாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதிக்குசென்ற பொலிசார் 9 நபர்களை கைதுசெய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் இயந்திரம், மற்றும் வாகனம் ஒன்றையும் மீட்டிருந்தனர்.
சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த இருவரும் தென்பகுதிகளை சேர்ந்த 7 பேரும் என 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
No comments