டிப்பர் வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடுகளை வழங்க அஞ்சுகின்றதா மாவட்ட செயலகம்?
வவுனியாவில் சிறுபோக நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ள போதும், டிப்பர் வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடுகளை வழங்க மாவட்ட செயலக அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரின் இணை தலைமையில் அவசர கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் நேற்று (07.07) இடம்பெற்றது.
இதன்போது, தற்போது கட்டுமாண மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் டிப்பர் வாகனங்களுக்கு டீசல் தேவை இருக்காது. அபிவிருத்தி அல்லது கட்டுமாணப் பணி நடைபெறுகின்றது என்பதை சம்மந்தப்பட்ட திணைக்களம் உறுதிப்படுத்தும் பட்சத்தில் குறித்த டிப்பர்களுக்கு டீசல் எரிபொருள் வழங்கலாம் எனவும் பல டிப்பர்கள் டீசல் எரிபொருளை பெற்று கறுப்பு சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தேவைக்கேற்ற டிப்பர்களுககு டீசல் வழங்குமாறும் ஏனைய டிப்பர்களுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி விவசாய அறுவடைக்கு தேவையான டீசலை வழங்குமாறும் கோரப்பட்டது.
அதனை மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. டிப்பர்களுக்கு கட்டுப்பாடு போட அவர்கள் முன்வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்ட எவருக்கும் தான் வெளியேறும் காரணத்தை கூறாது மேலதிக அரசாங்க அதிபர் இடை நடுவில் வெளியேறிச் சென்றிருந்தார். மாவட்ட அரச அதிபரும் டிப்பர் கட்டுப்பாடுகளை போட விரும்ப வில்லை. எனவே மாவட்ட செயலகம் சுயாதீனமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments