Breaking News

வவுனியா நகரசபை உறுப்பினராக நடராசா கருணாநிதி நியமனம்

வவுனியா நகரசபையின் புதிய உறுப்பினராக நடராசா கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தேர்தல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நா. சேனாதிராஜா அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்தமையையடுத்து அவரது இடத்திற்கு ந.கருணாநிதியின் பெயர் கட்சியின் பொதுச்செயலாளரால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சிபார்சு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

கட்சித்தலைமையின் வேண்டுகோளிற்கமைய வட்டாரங்களில் பொதுப்பட்டியலில் போட்டியிட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஏற்கனவே வவுனியா நகர வட்டாரத்தின் உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் அவரது இடத்திற்கு பொதுப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டத்தில் வதியும் நடராசா கருணாநிதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஆவார். 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் குடியிருப்பு வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொதுப்பட்டியலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments