Breaking News

ஜனாதிபதியை தடுக்க எம்மால் முடியாது


உத்தியோகபூர்வமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் சட்ட அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு இல்லை என்று, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே. ஏ. ஏ. எஸ். கனுகல தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது, ​​நாட்டை விட்டு அவர் வெளியேற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று (12) இரவு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அவர் மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments