ஊடகவியலாளர்களை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்த்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளே இவ்வாறு உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். (Vavuniyan)
No comments