வவுனியா புளியங்குளத்தில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்
வவுனியா புளியங்குளம், காட்டுப்பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தேன் எடுப்பதற்காக எட்டுபேர் கொண்ட குழு புளியங்குளம் கச்சக்கொடி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற வேளையிலேயே கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து ஏனையவர்களினால் குறித்த இளைஞரை அப்பகுதியில் இருந்து மீட்டு புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு படுகாயமடைந்த இளைஞனை மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புளியங்குளம் பகுதியை சேர்ந்த நடராசா தர்மராசா (வயது 33) என்ற இளைஞரே கரடியின் தாக்குதலுக்கு இலக்கி படுகாயமடைந்திருந்தார்.
No comments