எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர்
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து எரிபொருள் வழங்காது வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.
இதன்போது அதிகளவானவர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்ற போது அங்கு தனது சொந்த வாகனத்தில் வருகை தந்த மேலதிக அரசாங்க அதிபர் தனது வாகனத்திற்கு முழுமையாக எரிபொருள் நிரப்புமாறு தெரிவித்தார்.
எனினும் அங்கிருந்த சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன் இன்று சுகாதார தரப்பினருக்கு மட்டும் எரிபொருள் வரங்குவதால் மேலதிக அரசாங்க அதிபருக்கு வழங்க வேண்டாமென எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அங்கிருந்து சென்றிருந்தார்.
No comments