IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா ஐ.ஓ.சியும் நாளை (9) மூட வாய்ப்புள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கும் அதே வேளையில் IOC மட்டுமே தற்போது தனியார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments