Breaking News

வவுனியாவில் வழமைக்கு திரும்பும் பெற்றோல் விநியோகம்!! வெற்றியடைந்த கியூஆர் முறைமை!!


வவுனியாவில் கியூஆர் முறைமை மூலமான எரிபொருள் விநியோகம் வெற்றியடைந்துள்ளதுடன், இதனால் வரிசைகள் குறைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில் அரசினால் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த முறைமை நாடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் வவுனியாவிலும் அமுலுக்கு வந்தது. 

இதனையடுத்து வவுனியாவின் 16 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த முறைமை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து எரிபொருள் வரிசைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளே இல்லாமல் பெற்றோலினை பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. (Vavuniyan)




No comments