வவுனியாவில் கோவிட் தொற்று ஏற்பட்டு வருவதால் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்
வவுனியாவில் கோவிட் தொற்று ஏற்பட்டு வருவதனால் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் கோவிட் தொற்றும் நாட்டில் அதிகரித்து வருகின்றது. இம் மாதம் வவுனியாவில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், பலர் கோவிட் தொற்றுக்குளாகியுள்ளனர்.
இதன்காரணமாக கோவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் நடவடிக்கையாக பைசர் கோவிட் தடுப்பூசிகள் மீள ஏற்றப்படவுள்ளன. இதுவரை தடுப்பூசிகள முறையாக போடாதவர்கள் (1,2,3,4) தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அந்தவகையில், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை தடுப்பூசிகளைப் பெற முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
No comments