வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் சிகையலங்காரத்தில் புதிய கட்டுப்பாடு
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரினால் மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்வது தொடர்பாக சிகையலங்கார சங்கத்தினருக்கு கடிதம் ஒன்று 01.08 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் வடமாகாணத்தில் அதிகளவு மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக விளங்கும் எமது பாடசாலை மாணவர்கள் Police Crop முறையில் சிகையலங்காரம் செய்து பாடசாலைக்கு சமூகமளித்தல் அவசியமானதாகும், தங்கள் கீழ் இயங்கும் சிகையலங்கார நிலையங்களில் மாணவர்களுக்கு உரிய வகையில் சிகையலங்காரம் செய்யாமையால் மாணவர்கள் மத்தியில் ஒரு சீரான நிலையினை பேண முடியாது பல அசௌகரியங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே தங்களின் சங்க உறுப்பினர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவித்து இறுக்கமான நடைமுறையினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் Policecrop முறையில் மாணவர்களுக்கு சிகையலங்காரம் மாணவர்களை செய்விக்காத நிலையங்களுக்கு திரும்ப அனுப்பும் போது கட்டணங்கள் இன்றி மீள சிகையலங்காரம் செய்து வளர்ந்து வரும் மாணவர்கள் மீதான தங்கள் சமூக பொறுப்பினை தெரியப்படுத்தி மாணவர்களை ஒழுக்க நெறியில் வழிப்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த கடிதம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வவுனியா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் போன்றவர்களுக்கும் தகவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments