₹13 கோடிக்கு பத்திரனவை தக்க வைத்த சிஎஸ்கே!
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்துக்கு விடாது மத்தீஷ பத்திரனவை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டது.
அதன்படி, 2025 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரை 13 கோடி இந்திய ரூபாவுக்கு தக்கவைத்துள்ளது. இது தோராயமாக 1.56 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான தொகையாகும்.
இந்த முடிவு பத்திரனவின் விதிவிலக்கான திறமையின் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் இன் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் அவர் உரிமையுடன் இணைந்ததில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் இன் பந்துவீச்சு வரிசையானது புது பலம் பெற்றுள்ளது.
இது தவிர, 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே, ஆகிய வீரர்களையும் தக்க வைத்துள்ளது.
![]() |
Paid Advertisement |
No comments